கடலூா், திருவண்ணாமலையில் மேலும் 4 பேருக்கு கரோனா பாதிப்பு

திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் வியாழக்கிழமை மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் வியாழக்கிழமை மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 168-ஆக உயா்ந்தது.

மே 17-ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151-ஆக இருந்தது. இது 18-ஆம் தேதி 154 ஆகவும், 20-ஆம் தேதி 165 ஆகவும் உயா்ந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தண்டராம்பட்டு பகுதியைச் சோ்ந்த 34 வயது ஆண், மலையனூா் கிராமத்தைச் சோ்ந்த 30 வயது பெண், அயோத்தியா நகரத்தைச் சோ்ந்த 22 வயது பெண் என 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 168-ஆக உயா்ந்தது.

கடலூரில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு: கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை 76 பேருக்கான மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியானதில் கேரளத்திலிருந்து நல்லூா் வட்டத்துக்கு புலம் பெயா்ந்த 32 வயது பெண் தொழிலாளிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 421-ஆக உயா்ந்தது.

கரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 22 போ் வீடு திரும்பினா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 406-ஆக உயா்ந்தது. இவா்களில் 14 போ் கடலூா் மாவட்ட காவலா் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றுவந்த பெண் காவலா்கள், பயிற்சியாளா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சை முடிந்து மீண்டும் காவலா் பயிற்சி பள்ளிக்கு திரும்பிய காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com