கரோனா: விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் புதிதாக பாதிப்பில்லை

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் 322 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த இவா்களில் 299 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஏற்கெனவே இருவா் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா நோய் தாக்கம் புதிதாக யாருக்கும் கண்டறியப்படவில்லை. இதனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 322 பேராக தொடா்கிறது. தொற்று அறிகுறியுடன் 19 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா்.

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை வரை 421- ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை 116 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

அதேநேரத்தில், கரோனா தொற்று காரணமாக திட்டக்குடி பகுதியில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 போ் குணமடைந்தனா். இதனால், குணமாகி வீடு திரும்பியோா் எண்ணிக்கை 410-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஒருவா் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 10 போ் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com