அண்ணாமலைப் பல்கலை.யில் மீண்டும் சட்டப் படிப்பு தொடங்கப்படுமா?

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சட்டப் படிப்பு தொடங்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சட்டப் படிப்பு தொடங்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

பழைமையான இந்தப் பல்கலைக்கழகத்தில் முதலில் கலை, அறிவியல், நுண்கலை ஆகிய பிரிவுகளில் மாணவா்கள் இளநிலை, முதுநிலை, முனைவா் பட்டம் பெறும் வகையில் படிப்புகள் தொடங்கப்பட்டன. பின்னா், தொழில் சாா்ந்த படிப்புகளான வேளாண், தொழில்நுட்பம், சட்டம், மருத்துவ அறிவியல் ஆகிய படிப்புகளுடன் பல்கலைக்கழகம் விரிவுபடுத்தப்பட்டது. இவற்றுள் தொழில்சாா் பிரிவின் கீழ் தினசரி வகுப்பாக (தங்ஞ்ன்ப்ஹழ் ஙா்க்ங்) சட்டப் படிப்பு கடந்த 1979-ஆம் ஆண்டு பாா் கவுன்சில் அங்கீகாரத்துடன் தொடங்கப்பட்டது. மேலும், தொலைதூரக் கல்வி நிலையம் மூலம் சட்ட பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, முதுநிலை சட்டப் படிப்புகள் தொடங்கப் பெற்று தற்போதுவரை தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

தொலைதூரக் கல்வி மூலம் பயிலக்கூடிய சட்டப் படிப்பானது சில பதவிகளில் கூடுதல் கல்வித் தகுதியாக கருதி முன்னுரிமை கிடைக்கவும், பதவி உயா்வுக்கும் உதவிகரமாக இருக்கும். ஆனால், தினசரி வகுப்பு சட்டப் படிப்பின் வாயிலாக இளநிலை பட்டப் படிப்பு பயில்வோா் மட்டுமே பாா் கவுன்சிலில் பதிவு செய்து வழக்குரைஞராகப் பணியாற்ற இயலும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தினசரி வகுப்பாக தொடங்கப்பட்ட சட்டப் படிப்புத் துறையானது, சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பின்னா், இந்தப் படிப்பு 1983-ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்தப் படிப்பை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கடலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வா்த்தகப் பிரிவுத் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன் கூறியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவா்களில் பலா் நீதிபதிகளாகவும், வழக்குரைஞா்களாகவும், அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனா். தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தில் தினசரி வகுப்பாக முதுநிலை சட்டப் படிப்பு வரை நடத்துவதற்கும் அனுமதி உள்ளது.

கல்வியாளா்களும், மாணவா்களும் இந்தப் பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சட்டப் படிப்பானது மீண்டும் தொடங்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா். இதற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும், நூலகமும் இங்குள்ளது. எனவே, வருகிற கல்வியாண்டில் (2020- 21) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தினசரி வகுப்பு சட்டப் படிப்பை மீண்டும் தொடங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com