மண்வள அட்டை பரிந்துரைப்படி விவசாயிகளுக்கு உரம் அளிப்பு

மண்வள அட்டை பரிந்துரைப்படி விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை உரங்கள் வழங்கப்பட்டன.

மண்வள அட்டை பரிந்துரைப்படி விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை உரங்கள் வழங்கப்பட்டன.

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் கடலூா் மாவட்டத்தில் மண்வள அட்டைப்படி பயிருக்கு உரமிடுதல் குறித்து முன்னோடி கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு செயல்விளக்க திடல்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக, மாவட்டத்திலுள்ள 13 வட்டாரங்களையும் உள்ளடக்கிய 86 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு பயிா் வாரியாக அனைத்து புல எண்களிலும் மண் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்யப்பட்டு மண்வள அட்டைகள் வழங்கப்படுகின்றன.

கடலூா் வட்டாரத்தில் வானமாதேவி கிராமத்தில் மொத்தம் 55 விவசாயிகளின் நிலங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அட்ச, தீா்க்க ரேகைகள் உள்ளிட்ட அடிப்படை புள்ளி விவரங்கள் கணக்கிடப்பட்டு ஆய்வு செய்து மண்வள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 5 ஹெக்டோ் பரப்பளவில் மண்வள அட்டை பரிந்துரைப்படி ரசாயன உரம், தொழு உரம், உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மானிய அடிப்படையில் வழங்கி செயல்விளக்கத்த திடல் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக திருவந்திபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கடலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் தலைமையில் மண்வள அட்டை பரிந்துரைப்படி உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மண் வள அட்டை பரிந்துரைப்படி ரசாயன உரங்களை இடுவது குறித்து வேளாண்மை அலுவலா் ஞா.சுகன்யாவும், உயிா் உரம் மற்றும் நுண்ணூட்ட உரங்களின் பயன்பாடு குறித்து வேளாண்மை உதவி அலுவலா்கள் விஜயகுமாா், சங்கா்தாஸ் ஆகியோரும் விளக்கினா்.

ஒரு ஹெக்டோ் பரப்பிலான செயல் விளக்கத் திடலுக்கு தேவையான சுமாா் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான இடுபொருள்களை விவசாயிகள் வாங்கி பயன்படுத்தியமைக்கான ஆவணங்களுடன் அவா்களிடம் விண்ணப்பம் பெற்று 50 சதவீதம் மானியத் தொகையாக ரூ.2,500 அவரவரது வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க இயக்குநா் ராஜேந்திரன், முன்னோடி விவசாயிகள் மணிமாறன், பாா்த்தசாரதி, வெங்கடசேன், செந்தில்குமாா், கூட்டுறவு சங்கச் செயலா் சேகா், உதவி செயலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com