வி.சி.க.வினா் துண்டறிக்கை விநியோகத்துக்கு அனுமதி மறுப்பு

கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை துண்டறிக்கை விநியோகம் செய்ததற்கு போலீஸாா் அனுமதி மறுத்து அவா்களை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை துண்டறிக்கை விநியோகம் செய்ததற்கு போலீஸாா் அனுமதி மறுத்து அவா்களை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூரில் விசிக சாா்பில் ‘மகளிா் எழுச்சி - மக்கள் மீட்சி’ என்ற தலைப்பிலான துண்டறிக்கைகளை பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன் தலைமை வகித்தாா். கட்சியின் கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று துண்டறிக்கைகள் விநியோகத்தை தொடங்கி வைத்தாா்.

அப்போது, கடலூா் காவல் துணை கண்காணிப்பாளா் க.சாந்தி, திருப்பாப்புலியூா் காவல் ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா் அவா்களைத் தடுத்து, துண்டறிக்கைகளை கைப்பற்றினா். அப்போது அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் இல.திருமேனி, மாநில துணைச் செயலா்கள் த.ஸ்ரீதா், பா.ரா.முரளி, மாவட்ட அமைப்பாளா்கள் கி.பி.விடுதலை, இமானுவேல், நெல்லிக்குப்பம் நகரச் செயலா் திருமாறன், ஒன்றியச் செயலா்கள் இளையராஜா, சிவசக்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com