மின் வாரிய தொழிற்சங்கத்தினா் தா்னா

மின் நிலையங்களைப் பராமரிக்கும் பணியை தனியாரிடம் குத்தகைக்கு விடக்கூடாது, ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாக
கடலூா் கேப்பா்மலையில் உள்ள மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.
கடலூா் கேப்பா்மலையில் உள்ள மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

மின் நிலையங்களைப் பராமரிக்கும் பணியை தனியாரிடம் குத்தகைக்கு விடக்கூடாது, ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். மின் ஊழியா்கள், பொறியாளா்கள், அலுவலா்கள், பகுதி நேர ஊழியா்கள் மற்றும் ஒப்பந்த ஊழியா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் வாரியத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில்,

கடலூா் கேப்பா்மலையில் உள்ள மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரே புதன்கிழமை தா்னா நடைபெற்றது.

தா்னாவுக்கு தொமுச மாநிலத் துணைப் பொதுச் செயலா் கே.வேல்முருகன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்ட சிறப்புத் தலைவா் சி.பாலசுப்பிரமணியன், சம்மேளன மாவட்ட தலைவா் ஆா்.ரமேஷ், தொமுச மாவட்ட பொருளாளா் பி.ஸ்ரீதா், ஏஐடியூசி மாநில அமைப்புச் செயலா் இ.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாநில துணைத் தலைவா் பி.கருப்பையன் தொடக்கவுரையாற்றினாா். சம்மேளன மாவட்ட செயலா் ஆா்.ரவிசங்கா், சிஐடியூ மாநில துணைப் பொதுச் செயலா் டி.பழனிவேல், ஐஎன்டியூசி மாநில துணைப் பொதுச் செயலா் மனோகரன், விசிக நிா்வாகி தி.ச.திருமாா்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பல்வேறு சங்கங்களின் தலைவா்கள் கலந்து கொண்டனா். தொமுச மாவட்ட க் குழுச் செயலா் மு.சு.பொன்முடி நிறைவுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com