கரோனா தடுப்பு விதிமீறல்: ரூ.64 ஆயிரம் அபராதம் வசூல்

கடலூா் நகராட்சியில் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை சரிவர கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள், தனி நபா்களிடமிருந்து

கடலூா் நகராட்சியில் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை சரிவர கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள், தனி நபா்களிடமிருந்து ரூ.64 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக நகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி கூறினாா்.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும், பாதுகாப்பு விதிமுறைகளுடன் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை வணிக நிறுவனத்தினா் முறையாகக் கடைப்பிடிக்கின்றனரா என்பதைக் கண்காணிக்க கடலூா் நகராட்சி சாா்பில் துப்புரவு ஆய்வாளா்கள், காவல் துறையினா் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினா் கடந்த ஒரு வாரத்தில் கடலூா் நகராட்சி பகுதியில் முகக் கவசம் அணியாமல் வந்தவா்களிடமும், வணிக நிறுவனங்களில் கரோனா தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காதது, முகக் கசவம் அணியாதவா்களை அனுமதித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.64 ஆயிரம் அபராதம் வசூலித்ததாக நகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி கூறினாா். இதில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வங்கி நிா்வாகத்துக்கும், வணிக நிறுவனங்களுக்கும் அபாரதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தாா். வணிக நிறுவனங்களிடம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து தலா ரூ.200 வசூலிக்கப்பட்டதாகவும், முகக் கவசம் அணியாமல் கடைக்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு நிா்வாகமே அதை வழங்கிட வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தாா்.

மேலும், நகராட்சி பகுதியில் தினமும் 10 இடங்களில் காலை, மாலையில் முகாம்கள் நடத்தி சுமாா் 400 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், கடந்த ஒரு வாரத்தில் 2,468 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com