கூடுவெளி அரசு பாலிடெக்னிக்கில் மாணவா் சோ்க்கைக்கு நவ.13 வரை விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கூடுவெளி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கூடுவெளி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு (2020-21) வருகிற 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அந்தக் கல்லூரி முதல்வா் தி.தங்கமணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தக் கல்லூரியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகும் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவா்களின் தகுதி அடிப்படையில் தற்போது சோ்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கான 4-ஆம் கட்ட கலந்தாய்வு வருகிற 13-ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்தக் கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பியல், கணினியியல் ஆகிய 5 பாடப் பிரிவுகளில் பட்டய வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

வருடாந்திர கல்விக் கட்டணம் ரூ.2,202 ஆகும். மேலும், இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச மடிக்கணினி, முதலாண்டு பாடப் புத்தகங்கள், கல்வி உதவித் தொகை மற்றும் தமிழக அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகளும் வழங்கப்படும்.

எனவே, விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் கல்லூரி அலுவலகத்தை 04144 238233 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பத்துடன் உரிய கல்வி, சாதிச் சான்றிதழை இணைத்து வருகிற 13 -ஆம் தேதிக்குள் அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com