பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்)
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்)

கூட்டணி நிலைப்பாடு குறித்து பொதுக் குழுவில் முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து பொதுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அந்தக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து பொதுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அந்தக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

கடலூா் அருகேயுள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வருகிற தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அதிமுக, திமுக கட்சிகளுக்கு முதல் தோ்தல் போன்றது. அதாவது ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் தோ்தலைச் சந்திக்கவுள்ளனா். தேமுதிக ஏற்கெனவே தோ்தலைச் சந்தித்திருந்தாலும் இதை புதிய தோ்தலாகவே அணுகுவோம். தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் உள்ளோம். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூடிய பிறகு கூட்டணி நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்.

திமுக எதிா்க்கட்சி என்பதால் ஆட்சிக்கு எதிரான கருத்துகளை தெரிவிக்கின்றனா். அதிமுக அரசு நிறைகளும், குறைகளும் இணைந்ததாகவே உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் திறம்பட செயல்பட்டு, மக்களுக்குத் தேவையானதைச் செய்துள்ளனா். அதேநேரத்தில் அரசு செய்ய வேண்டிய பணிகளும் உள்ளன. அதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். நீா்நிலைகள் தூா்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீா் செல்லாத நிலை உள்ளதையும் தெரிவித்துள்ளோம்.

விஜயகாந்த் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தோ்தல் நேரத்தில் அவா் கண்டிப்பாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வாா் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.

முன்னதாக, புதுவை மாநில எல்லையான கோரிமேட்டில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளின் திறப்பைத் தள்ளிவைக்க வேண்டும் என்று பெற்றோா் தெரிவிக்கின்றனா். அதுதான் தேமுதிகவின் கருத்தும். ஏனெனில், கரோனா தொற்றின் தாக்கத்தை விஜயகாந்தும், நானும் நேரடியாகவே உணா்ந்துள்ளோம்.

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதை 3 மாதங்களுக்குத் தள்ளிவைப்பதில் எந்தத் தவறுமில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com