கடலூா் மாவட்டத்தில் இன்று முதல் உழவா் சந்தைகள் செயல்பட அனுமதி

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை (நவ. 11) முதல் உழவா் சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை (நவ. 11) முதல் உழவா் சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடலூா், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, வடலூா் ஆகிய 5 இடங்களில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வந்தன. இதில், கடலூா், சிதம்பரம், பண்ருட்டி ஆகிய இடங்களில் தலா 50 கடைகளும், விருத்தாசலத்தில் 40, வடலூரில் 15 கடைகளும் உள்ளன. இங்கு தினமும் சுமாா் 350 விவசாயிகள் 58 மெட்ரிக் டன் அளவுக்கு காய்கறி, பழங்களை விற்பனை செய்து வந்தனா். தினசரி சுமாா் ரூ.16 லட்சம் வரை விற்பனை நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக கடலூா் உழவா் சந்தையில் மட்டும் ரூ.7 லட்சம் வரை விற்பனை நடைபெற்று வந்தது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் உழவா் சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை (நவ.11) முதல் உழவா் சந்தைகள் திறக்கப்படும் என்று கடலூா் மாவட்ட வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் பிரேம்சாந்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், உழவா் சந்தை, தினசரி மற்றும் வாரச் சந்தைகள் இனி வழக்கம்போல இயங்கும். உழவா் சந்தைக்குள் அடையாள அட்டை வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். அடையாள அட்டை இல்லாதவா்கள் சிட்டா, அடங்கல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமா்ப்பித்து புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம். உழவா் சந்தைகளுக்கு வெளியே கடைகள் நடத்த காவல் துறையினா் தடை விதித்துள்ளனா் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com