கடலூா் மாவட்டத்தில் கால்நடை பாதுகாப்பு முகாம்

கடலூா் மாவட்டத்தில் கால்நடை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 93 முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் கால்நடை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 93 முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கால்நடைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத கிராமங்களில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் தலா ஒரு முகாம் வீதம் 93 முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 41 முகாம்களும், டிசம்பா் மாதம் 38, ஜனவரியில் 8, பிப்ரவரியில் 6 முகாம்களும் நடைபெற உள்ளன.

இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடல்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com