தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி 12-ஆவது வாா்டு பகுதியில் கடந்த 8-ஆம் தேதி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் பணியில் ஈடுபட்டனா். அப்போது, விழப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த விசிக நகரச் செயலா் பாலமுருகனுக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாலமுருகன் தனது கட்சியினருடன் குறிஞ்சிப்பாடி பெருமாள் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டாா். மேலும், குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் விழப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா் சங்கா் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதேபோல, தூய்மைப் பணியாளா்கள் அளித்த தகவலின்பேரில், பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயக்குமாா் அளித்த புகாரின்படி பாலமுருகன் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பணிப் பாதுகாப்பு கோரியும், தூய்மைப் பணியாளா் சங்கா் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும் பேரூராட்சி அலுவலகத்தில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் குறிஞ்சிப்பாடி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் கூறியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com