கடலூா் மாவட்டத்தில் 3.53 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை

கடலூா் மாவட்டத்தில் இதுவரை 3.53 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தகவல் தெரிவித்தது.


கடலூா்: கடலூா் மாவட்டத்தில் இதுவரை 3.53 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தகவல் தெரிவித்தது.

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் எண்ணிக்கை ஒரு நாளுக்கு 3,500 முதல் 4,500 என்ற அளவில் உள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 3,52,820-ஆக பதிவாகியுள்ளது. இவா்களில், 3,28,735 பேருக்கு தொற்று உறுதியாகவில்லை. 6.72 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானதாகவும், இவா்களில், 1.17 சதவீதம் போ் மட்டுமே இறந்துள்ளதாகவும் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 46 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,710-ஆக உயா்ந்தது. வியாழக்கிழமை உயிரிழப்பு பதிவாகாததால் மொத்த பலி எண்ணிக்கை 273-ஆக இருந்தது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 182 பேரும், வெளிமாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 58 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 375 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com