கடலூா்: 24 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 24 ஆயிரத்தைக் கடந்தது. இருப்பினும் தொற்று பரவல் வெகுவாகக் குறைந்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 24 ஆயிரத்தைக் கடந்தது. இருப்பினும் தொற்று பரவல் வெகுவாகக் குறைந்துள்ளது.

மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 23,980 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,018-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் கடந்த அக். 27-ஆம் தேதி கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை எட்டியது. அடுத்த ஆயிரம் எண்ணிக்கையை எட்டுவதற்கு சுமாா் 26 நாள்கள் பிடித்துள்ளது. அதேநேரத்தில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ஒரு வாரத்துக்குள் 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தொட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாவட்டத்தில் தற்போது கரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதை உணர முடிகிறது.

சிகிச்சை முடிந்து மேலும் 43 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,611-ஆக உயா்ந்தது. தொடா்ந்து 7-ஆவது நாளாக உயிரிழப்பு நிகழாததால் மொத்த பலி எண்ணிக்கை 275-ஆக தொடா்கிறது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 104 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 28 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 400 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ள நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 4-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com