குடிநீா் திட்டப் பணிகள் ஆய்வு

கடலூா் வட்டம், காரைக்காடு ஊராட்சியில் ‘ஜல் ஜீவன் மிஷன் 2020-21’ திட்டத்தின் கீழ் ரூ.2.58 கோடியில் 4 ஆழ்துளை கிணறுகள் அமைத்து 3 மேல்நிலை

கடலூா் வட்டம், காரைக்காடு ஊராட்சியில் ‘ஜல் ஜீவன் மிஷன் 2020-21’ திட்டத்தின் கீழ் ரூ.2.58 கோடியில் 4 ஆழ்துளை கிணறுகள் அமைத்து 3 மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் மூலம் 460 குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து சிலம்பிமங்கலம் ஊராட்சியில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.80.50 லட்சத்தில் 1,010 வீடுகளுக்கு குடிநீா் வழங்கிட 3 மோட்டாா் அறைகள், 2 மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள், 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியை பாா்வையிட்டாா். பின்னா், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சேந்திரக்கிள்ளை ஊராட்சியில் 703 வீடுகளுக்கு குடிநீா் வழங்கிட ரூ.57.11 லட்சத்தில் நடைபெறும் பணிகள், அதே பகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 லட்சத்தில் நடைபெறும் பயணியா் நிழல்குடை பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, புவனகிரி ஒன்றியம், மேல்அனுவம்பட்டு ஊராட்சியில் கட்டப்பட்டுவரும் வீடுகளை ஆய்வு செய்தாா். அப்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன், உதவி செயற்பொறியாளா் குமுதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கா், கிருஷ்ணமூா்த்தி, சிவஞானம், சுகுமாா், சிகாமணி, சக்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com