நெடுஞ்சாலையில் 10 கி.மீக்கு ஒரு காவல்துறை குழு: ஐ.ஜி. நாகராஜன் தகவல்

கடலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் 10 கிலோமீட்டருக்கு ஒரு காவல்துறை குழு அமைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் சரக காவல்துறை ஐ.ஜி. நாகராஜன் கடலூரில் செவ்வாய்க்கிழமை கூறினார்.
கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்தார் வடக்குமண்டல காவல்துறை தலைவர் பி.நாகராஜன்
கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்தார் வடக்குமண்டல காவல்துறை தலைவர் பி.நாகராஜன்

கடலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் 10 கிலோமீட்டருக்கு ஒரு காவல்துறை குழு அமைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் சரக காவல்துறை ஐ.ஜி. நாகராஜன் கடலூரில் செவ்வாய்க்கிழமை கூறினார்.

கடலூர் மாவட்டத்திற்கு நிவர் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பி.நாகராஜன் ஆய்வு செய்தார்.

கடற்கரை கிராமங்களான பெராம்பட்டு, பரங்கிப்பேட்டை, சின்னூர், நொச்சிக்காடு உள்ளிட்ட இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ்வுடன் சென்று ஆய்வு நடத்தினார். மேலும், காவல்நிலையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கடலூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக செயல்படும் வகையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் 126 பேர் 6 குழுக்களாகவும், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைக் குழுவினர் தலா 15 பேர்  கொண்ட 15 குழுக்களும், மாநில பேரிடர் மேலாண்மைக்குழுவினர் 225 பேரும்  தயார் நிலையில் உள்ளனர்.

நிரந்தர பாதுகாப்பு மையங்களில்  தலா ஒரு காவலரை வாக்கி-டாக்கியுடன் நியமித்து உள்ளோம். மாவட்டத்தின் வழியாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் சுமார் 260 கி.மீ செல்கிறது. 10 கி.மீ தூரத்திற்கு ஒரு காவல்துறை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் ஆம்புலன்ஸ் வாகனம், ஜேசிபி இயந்திரம், மரம் அறுக்கும் இயந்திரம் ஆகியவை இருக்கும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட 10 கி.மீ தூரத்திற்குள் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் இக்குழுவினர் விரைந்து செயல்படுவார்கள். பொதுமக்கள் அவசரத் தேவைக்கு 1077 அல்லது 100 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.

மேலும், 5 படகுகளில் மீட்புக்குழுவினரும், மீனவர்களுடன் இணைந்து 6 படகுகளையும் காவல்துறை சார்பில் தயார் நிலையில் வைத்துள்ளோம். பொதுமக்கள் எந்நேரத்திலும் காவல்துறையின் உதவியை நாடலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com