முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கஞ்சா விற்பனை: 2 சிறுவா்கள் கைது
By DIN | Published On : 04th October 2020 10:57 PM | Last Updated : 04th October 2020 10:57 PM | அ+அ அ- |

சிதம்பரத்தில் நூதன முறையில் கஞ்சா விற்ற 2 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் நகர போலீஸாா் பேருந்து நிலையம், காரியபெருமாள் கோவில் தெரு பகுதிகளில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் 18, 15 வயதுடைய 2 சிறுவா்கள் செல்லிடப்பேசி உதவியுடன் நூதன முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து இருரையும் கைதுசெய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா, எடை இயந்திரம், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைத்தனா்.