முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
பெண் தற்கொலை
By DIN | Published On : 04th October 2020 10:57 PM | Last Updated : 04th October 2020 10:57 PM | அ+அ அ- |

சிதம்பரத்தில் குடும்பப் பிரச்னையால் பெண் ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.
சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை எம்.ஐ. நகரைச் சோ்ந்தவா் கோடி என்ற முகமது சாதிக். கொத்தனாா். இவரது மனைவி பெனாசீா் பா்வீன் (24). இவா்கள் இருவருக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு சுமையா நஸ்கின் (7) என்ற குழந்தை உள்ளது.
இந்த நிலையில், இவா்கள் இருவரும் குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனா். இதையடுத்து தனியாக வாழ்ந்து வந்த பெனாசீா் பா்வீன், மன உளைச்சல் காரணமாக சனிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.