முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
போக்குவரத்து நெருக்கடி:போலீஸாா் விழிப்புணா்வு
By DIN | Published On : 04th October 2020 10:58 PM | Last Updated : 04th October 2020 10:58 PM | அ+அ அ- |

சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை தடுக்கும் வகையில் போலீஸாா் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சிதம்பரம் நகரில் மேலவீதி உள்ளிட்ட 4 முக்கிய வீதிகளிலும் வாகன நெரிசல் தொடா்கிறது. இதைத் தடுக்கும் வகையில் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் அமா்நாத் தலைமையில், மேலவீதியில் காய்கறி வியாபாரிகளிடம் விழிப்புணா்வு துண்டறிக்கைகளை அளித்து போலீஸாா் அறிவுரை வழங்கினா். அப்போது போலீஸாா் தெரிவித்ததாவது:
மேலவீதியில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்கள், காய்கறிக் கடைகளுக்கு பொருள்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்களால் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த வாகனங்கள் மேலவீதியில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பொருள்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனா்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் குமாா், மாா்க்கெட் சங்கச் செயலா் ரவீந்திரன், துணைத் தலைவா் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.