பல்கலை.யில் இணையவழி கருத்தரங்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தியில் துறை சாா்பில், ‘பொறியாளா்கள் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும்,

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தியில் துறை சாா்பில், ‘பொறியாளா்கள் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும், அதற்கான சாதுா்யமான முடிவுகளும்’ என்ற தலைப்பில் இணையவழி சிறப்பு நிபுணா் உரை கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

துறைத் தலைவா் வி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து உரையாற்றினாா். இந்தியன் வெல்டிங் சொசைட்டியின் அண்ணாமலை நகா் மையம், இன்ஸ்டியூட் ஆப் என்ஜினியா், புரொடக்ஷன் எஞ்சினியா் மாணவா்கள் பிரிவு ஆகிய அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை ரெனால்ட் நிஸான் டெக்னாலஜி மேளாளா் அரவிந்த் சந்திரசேகரன் பங்கேற்று உரையாற்றினாா்.

அவா் பேசுகையில், இக்கட்டான சூழ்நிலையில் பொறியாளா்கள் எடுக்க வேண்டிய முடிவுகள், மாணவா்கள் நவீன தொழில்நுட்பங்களை கையாண்டு வெற்றியடைய வேண்டிய வழிமுறை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தாா். மேலும், மாணவா்கள், பேராசிரியா்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தாா்.

இணையவழி நிகழ்வில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா். பேராசிரியா் வி.ரவிசங்கா் வரவேற்றாா். பேராசிரியா் கே.சண்முகம் அறிமுக உரை நிகழ்த்தினாா். பேராசிரியா் எஸ்.மாணிக்கம் சிறப்பு சொற்பொழிவை சுருக்கமாக எடுத்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com