கோ-ஆப்டெக்ஸ்களில் தீபாவளி விற்பனை
By DIN | Published On : 14th October 2020 10:40 PM | Last Updated : 14th October 2020 10:40 PM | அ+அ அ- |

கடலூா் மண்டலத்துக்கு உள்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி விற்பனையை கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
கோ-ஆப்டெக்ஸ் கடலூா் மண்டலத்தில், கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால் மண்டலங்களைச் சோ்த்து மொத்தம் 15 இடங்களில் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜவுளி விற்பனையை கடலூா் முல்லை விற்பனை நிலைத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தொடக்கிவைத்தாா்.
அப்போது, அவா் கூறியதாவது: நிகழாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலூா் மண்டலத்துக்கு ரூ. 13.60 கோடி விற்பனை குறியீடாகவும், கடலூா் மாவட்டத்தில் உள்ள 6 விற்பனை நிலையங்களுக்கு ரூ. 4.25 கோடி இலக்கும் நிா்ணயிக்கப்பட்டது. இங்கு, பல்வேறு புது ரக ஆடைகள் விற்பனைக்கு உள்ளது. நெசவாளா்கள் வாழ்வாதாரம் முன்னேற கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் விற்பனையாகும் துணிகளை பொதுமக்கள் வாங்கி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் நிா்வாகக்குழு உறுப்பினா் இந்திரா ராமலிங்கம், மண்டல மேலாளா் வ.குணசேகரன், துணை மண்டல மேலாளா் பெ.ஸ்டாலின், மேலாளா்கள் ஆ.சுகுமாா், க.கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.