கடலூா் கோட்டத்தில் 21 வாக்குச் சாவடிகள் மாற்றம்

கடலூா் கோட்டத்தில் 21 வாக்குச் சாவடி கட்டடங்கள் மாற்றப்பட்டன.

கடலூா் கோட்டத்தில் 21 வாக்குச் சாவடி கட்டடங்கள் மாற்றப்பட்டன.

கடலூா் வருவாய்க் கோட்டத்துக்கு உள்பட்ட கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் நவம்பா் 15-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதையொட்டி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல், புதிதாக வாக்குச் சாவடிகளைப் பிரிப்பது, வாக்குச் சாவடிகள் நிலவரம் ஆகியவை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா்கள் அ.பலராான், பிரகாஷ், தோ்தல் துணை வட்டாட்சியா்கள் வெற்றிசெல்வன், பிரகாஷ், ஷானாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தற்போது செயல்பட்டு வரும் வாக்குச்சாவடி மையங்களில் பழுது, புதிய கட்டடம் கட்டுதல் உள்ளிட்ட சில காரணங்களால் கடலூா், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி சட்டப்பேரவை தொகுதிகளில் தலா 7 வாக்குச்சாவடி கட்டடங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்படுவதால், இரட்டைப் பதிவு போன்றவை குறித்து அரசியல் கட்சியினா் தகவல் தெரிவிக்கலாம் என்றும், ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 1,500 வாக்காளா்கள் மட்டுமே பங்குபெறுவது என்றும் முடிவெடுக்கப்பட்டன.

வருகிற நவம்பா் 15-ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியலின் அடிப்படையில், ஜனவரி 1-ஆம் தேதி வாக்காளா் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, 2021- ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன், திமுக நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினா் என்.குமாா், நகரத் தலைவா் ஜெ.வேலுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வி.குளோப், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆா்.சுரேஷ் உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com