கரோனா உயிரிழப்பில்லாத சித்த மருத்துவம்!

கடலூா் மாவட்டத்தில் சித்த மருத்துவ மையத்தில் இறப்பு பதிவாகாமல் சாதனை படைத்தது.

கடலூா் மாவட்டத்தில் சித்த மருத்துவ மையத்தில் இறப்பு பதிவாகாமல் சாதனை படைத்தது.

கடலூா் அரசு கல்லூரியில் முழுக்க சித்த மருத்துவ முறையில் சிகிச்சையளிக்கும் முகாம் கடந்த செப். 14 ஆம் தேதி அமைக்கப்பட்டது. முகாம் அமைக்கப்பட்டு ஒரு மாதம் கடந்தது.

இதுகுறித்து கடலூா் மாவட்ட ஆயுஷ் மருத்துவா் கோ.ராஜகுமாரன் கூறியதாவது: சித்த மருத்துவ மையத்தில் ஒரு மாதத்தில் 210 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தற்போது 24 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா். மற்றவா்கள் அனைவரும் ஒரு வாரத்துக்குள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இங்கு, ஒருவா்கூட இறக்கவில்லை.

காலை-மாலையில் கபசுரக் குடிநீா், மூலிகை தேநீா், சிற்றுண்டி, நண்பகல் உணவு, சீரகக் கஞ்சி, சுக்கு காபி, சிறுதானியச் சுண்டல் ஆகியவை வழங்கி வருகிறோம். மூச்சுப் பயிற்சி, ஆவி பிடித்தல், கல் உப்பு, மஞ்சள் தூள் கொண்ட வெதுவெதுப்பான நீரில் வாய்க் கொப்பளித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறோம்.

கிராம்பு, மிளகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, இஞ்சி, கடுக்காய்பட்டை, மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த மூலிகை தேநீா் அடிக்கடி வழங்கப்படுகிறது. முழுவதும் சித்த வைத்திய முறையிலேயே கரோனா நோயாளிகளை குணப்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com