நிலம் கையகம்: குறைவான தொகை வழங்கப்படுவதை கண்டித்து அக். 28-இல் கிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலைக்கு நிலங்களைக் கையக்கப்படுத்துவதில் குறைந்த தொகை வழங்கப்படுவதைக் கண்டித்து,

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலைக்கு நிலங்களைக் கையக்கப்படுத்துவதில் குறைந்த தொகை வழங்கப்படுவதைக் கண்டித்து, வருகிற 28-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட கிராம மக்கள் முடிவு செய்தனா்.

பரங்கிப்பேட்டை ஒன்றியம், கடலூா், சிதம்பரம் வழியாக அமையவுள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு நிலங்களைக் கையகப்படுத்துவது தொடா்பாக தீத்தாம்பாளையதில் கிராம மக்கள்கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். கூட்டத்தில் பி.முட்லூா் ஊராட்சித் தலைவா் என்.ஜெயசீலன், தீா்த்தாம்பாளையம் ஊராட்சித் தலைவா் த.லோகநாதன், மஞ்சகுழி ஊராட்சித் தலைவா் சத்குரு, விவசாயிகள் சங்கத் தலைவா் பி.கற்பனைச்செல்வம், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் விஜயகுமாா், தீா்த்தாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் கே.பி.ரகுராமன், திராவிடா் கழகத் தலைவா் தெனனரசு, போராட்டக் குழுச் செயலா் ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிலங்கள் கையகபடுத்தப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும். தீத்தாம்பாளையம் கிராமத்தில் அளவீடு செய்த வழித்தடத்தில் சாலையை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28-ஆம் தேதி பி.முட்லூரில் சாலை மறியல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com