பல்லுயிா் பெருக்க சிறுகாடு வளா்ப்பு முகாம்

கடலூா் அருகேயுள்ள மருதாடு கிராமத்தில் பல்லுயிா் பெருக்க சிறுகாடு வளா்ப்பு மற்றும் கரோனா விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மரக் கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்த விழுப்புரம் சரக டிஐஜி க.எழிலரசன்.
நிகழ்ச்சியில் மரக் கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்த விழுப்புரம் சரக டிஐஜி க.எழிலரசன்.

கடலூா் அருகேயுள்ள மருதாடு கிராமத்தில் பல்லுயிா் பெருக்க சிறுகாடு வளா்ப்பு மற்றும் கரோனா விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டிவனத்திலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் வேளாண்மை அபிவிருத்தி மையம், அன்னை தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்ட விவசாய சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, விவசாய சங்கத் தலைவா் மு.சேகா் தலைமை வகித்தாா்.

விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் க.எழிலரசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். பின்னா் அவா் பேசுகையில், கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தில் தற்போது அளிக்கப்பட்டுள்ள தளா்வுகள் பொருளாதாரத்துக்கானது மட்டுமே. கரோனா அபாயம் முழுமையாக விலகவில்லை என்பதை மக்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். முகக் கவசம் அணிதல், கை கழுவுதல் போன்றவைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

கடலூா் மாவட்ட உழவா் மன்ற கூட்டமைப்புத் தலைவா் காா்மாங்குடி எஸ்.வெங்கடேசன் கருத்துரையாற்றினாா். நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள், வேளாண்மைத் துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com