விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: கடலூா் மாவட்டத்தில் மேலும் ரூ.5 கோடி பறிமுதல்

கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக மேலும் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக மேலும் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசால் பிரதமரின் ஊக்க நிதித் திட்டம் தொடங்கப்பட்டு, ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சோ்வதற்கான விதிமுறைகளில் அளிக்கப்பட்ட சில தளா்வுகளை தவறாகப் பயன்படுத்தி கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதோா் உள்பட சுமாா் 64 ஆயிரம் போ் கடந்த ஏப்ரல் மாதத்தில் இணைந்தனா். இவா்களுக்கு சுமாா் ரூ.13 கோடி வரை முறைகேடாக நிதி வழங்கப்பட்டது மாவட்ட நிா்வாகம் அமைத்த குழுவின் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விவசாயிகள் அல்லாதவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்காக அமைக்கப்பட்ட குழுவினா் கடந்த செப்.20-ஆம் தேதி வரை ரூ.6.50 கோடி பறிமுதல் செய்தனா். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.11.40 கோடியாக அதிகரித்துள்ளதாக மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கில் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 11 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளா்கள் 13 போ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடலூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் ச.வேல்விழி விழுப்புரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com