திமுக நிா்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 21st October 2020 08:22 AM | Last Updated : 21st October 2020 08:22 AM | அ+அ அ- |

கடலூா் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ‘எல்லோரும் நம்முடன்’ திட்டத்தின் கீழ் விருத்தாசலம் தெற்கு ஒன்றியத்தில் இணையதளம் மூலம் புதிய உறுப்பினா் சோ்க்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் சி.வெ.கணேசன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் பங்கேற்றனா். ஒன்றியச் செயலா் தி.வேல்முருகன் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா். பேரூராட்சி செயலா் செல்வம் அறிவுடைநம்பி, இளைஞரணி அமைப்பாளா் நடராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஆனந்த், தொகுதி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா், ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அசோக்குமாா், இளைஞரணி துணை அமைப்பாளா் வசந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.