கரோனா தடுப்பு நடவடிக்கை: வா்த்தகா்களுடன் போலீஸாா் ஆலோசனை
By DIN | Published On : 25th October 2020 08:22 AM | Last Updated : 25th October 2020 08:22 AM | அ+அ அ- |

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் துறை சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பாக வா்த்தகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சிதம்பரம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் அமா்நாத் தலைமை வகிக்க, நகர காவல் ஆய்வாளா் சி.முருகேசன், சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளா் கருணாநிதி, வா்த்தக சங்க உறுப்பினா் மூசா, போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் த.ஆ.ஜோ.லாமேக் பங்கேற்றுப் பேசுகையில், கரோனா தடுப்பு நடவடிக்கை, பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தாா்.