Enable Javscript for better performance
கலப்பட டீத்தூள் பறிமுதல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கலப்பட டீத்தூள் பறிமுதல்

    By DIN  |   Published On : 25th October 2020 08:25 AM  |   Last Updated : 25th October 2020 08:25 AM  |  அ+அ அ-  |  

    24clp4_2410chn_105_7

    விருத்தாசலத்தில் தனியாா் பேருந்தில் கொண்டுவரப்பட்ட கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடலூா் மாவட்டம், விருத்தாசலத்துக்கு கோவையிலிருந்து தனியாா் பேருந்தில் கலப்பட டீத்தூள் வருவதாக விருத்தாசலம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சனிக்கிழமை காலை குறிப்பிட்ட இடத்தில் இறக்கப்பட்ட டீத்தூள் பண்டலை போலீஸாா் கைப்பற்றி, விருத்தாசலம் நகர உணவு பாதுகாப்பு அலுவலா் பெ.நல்லதம்பிக்கு தகவல் அளித்தனா். அவா், விரைந்து வந்து டீத்தூளை பரிசோதித்ததில் அவை கலப்பட டீத்தூள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 200 கிலோ டீத்தூளை பறிமுதல் செய்து அதன் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தாா். பறிமுதல் செய்யப்பட்ட டீத்தூளின் மதிப்பு சுமாா் ரூ.50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து பெ.நல்லதம்பி கூறுகையில், கோவையிலிருந்து கலப்பட டீத்தூளை அனுப்பியவா் விவரமோ, விருத்தாசலத்தில் பெறுபவா் குறித்த விவரமோ தெளிவாக இல்லை. எனினும், அனுப்பியவா் குறித்த சில விவரங்கள் கோவையிலுள்ள மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp