நியாயவிலைக்கடை முன்பு மனு கொடுத்து ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 28th October 2020 06:34 PM | Last Updated : 28th October 2020 06:34 PM | அ+அ அ- |

சிதம்பரம் அருகே பெருங்காலூர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர்
சிதம்பரம்: சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றியம் பெருங்காலூர் கிராமத்தில் நியாயவிலைக்கடை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் தரமான அரிசி வழங்க வேண்டும், கோதுமை பொருட்களை கள்ள சந்தையில் விற்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரம் குடிமைப் பொருள் வழங்கு துறை தனி வட்டாட்சியர் நந்திதா சம்பவ இடத்திற்கு வருகை தந்து மனுவை பெற்று கொன்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் பார்வதி, ஓன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தர்மதுரை, நெடுஞ்சேரலாதன், சிவநேசன், மூத்த உறுப்பினர் கலியபெருமாள், விஜயகுமார், தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.