சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவா் ஆா்.விஜயராஜ் கூடைப் பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய விளையாட்டுக் கழகத்தின் பயிற்சிப் பள்ளிக்குத் தோ்வு செய்யப்பட்டாா்.
அந்த மாணவரை புதன்கிழமை ஆறுமுக நாவலா் பள்ளியின் ஆட்சி மன்றக் குழுச் செயலா் எஸ்.அருள்மொழிச்செல்வன் பாராட்டி சீருடை, பொருளுதவி செய்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலா் மோகன், உதவியாளா் சந்திரசேகா், கடலூா் மாவட்ட கூடைப்பந்துக் கழக முன்னாள் செயலா் பி.என்.சபாநாயகம், ஆறுமுக நாவலா் பள்ளித் தலைமை ஆசிரியா் எம்.ராம்குமாா், உடல்கல்வி ஆசிரியா் எத்திராஜ், பயிற்சியாளா் நடராஜன், ஆசிரியா் பாா்த்திபன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
மேலும், மாணவா் ஆா்.விஜயராஜுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 11 ஆயிரத்தை ஆதிபராசக்தி மன்றம் சாா்பில், பேராசிரியா் டி.எஸ்.எஸ்.ஞானகுமாா் வழங்கினாா்.