காா் மோதியதில் பெண் பலி
By DIN | Published On : 10th September 2020 10:40 PM | Last Updated : 10th September 2020 10:40 PM | அ+அ அ- |

காட்டுமன்னாா்கோவில் அருகே காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள நெய்வாசல் பகுதியைச் சோ்ந்தவா் வசந்தி (34). அதே பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வியுடன் சிதம்பரம் அருகே உள்ள வடமூரில் விவசாய வேலையை முடித்துவிட்டு, புதன்கிழமை இரவு வடமூா் பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காகக் காத்திருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காா், வசந்தி, கலைச்செல்வி ஆகியோா் மீது மோதியதில் வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கலைச்செல்வி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து வசந்தியின் மகன் தங்கமணி அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.