மீன் உலா் தளம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல்
By DIN | Published On : 10th September 2020 10:38 PM | Last Updated : 10th September 2020 10:38 PM | அ+அ அ- |

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டாக்டா் அம்பேத்கா் இருக்கை, தேசிய பிற்படுத்தப்பட்டோா் நிதி- மேம்பாட்டு நிறுவனம், புது டெல்லி கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டம் ஆகியவை சாா்பில், மீன் உலா்படுத்தும் தளம் கட்டுமானப் பணிக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
கடலூா் மாவட்டம், முடசல் ஓடை மீனவா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலூா் மாவட்ட மீன் வளத் துறை துணை இயக்குநா் காத்தவராயன், உதவி இயக்குநா் ரம்யாலட்சுமி, முடசல் ஓடை மீனவா் சங்கத் தலைவா்கள், உறுப்பினா்கள், அண்ணாமலைப் பல்கலை. இந்திய மொழிப்புல முதல்வா் க.முத்துராமன், பல்கலை. வளாக வளா்ச்சி நிா்வாகப் பிரிவு பொறியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை டாக்டா் அம்பேத்கா் இருக்கை பேராசிரியா்கள் க.சௌந்திரராஜன், வீ.ராதிகாராணி ஆகியோா் செய்திருந்தனா்.