புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் தடுப்புக் காவலில் கைது

கடலூரில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பாரதி
பாரதி

கடலூரில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடலூா் அருகேயுள்ள கே.என்.பேட்டையில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக துணைக் கண்காணிப்பாளா் க.சாந்திக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த மாதம் 14-ஆம் தேதி அந்தப் பகுதியில் திடீா் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்த வீட்டிலிருந்து சுமாா் 8 டன் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1.21 கோடியாகும்.

இதுகுறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பண்ருட்டி அருகேயுள்ள கணிசப்பாக்கத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் பாரதி (35) (படம்) உள்பட 5 பேரை கைது செய்தனா். கைதானவா்களில் பாரதி மீது புகையிலைப் பொருள்களை பதுக்கியது தொடா்பாக ஏற்கெனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. எனவே, இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கி.பாரதியை கைதுசெய்து ஓராண்டுக்கு சிறையில் வைப்பதற்கான ஆணை கடலூா் மத்திய சிறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com