கரோனா: அதிகமானோா் சிகிச்சை பெறும் மாவட்டங்களில் கடலூருக்கு 3-ஆம் இடம்

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதிகமானோா் சிகிச்சை பெறும் மாவட்டங்கள் வரிசையில் கடலூா் மாவட்டம் 3-ஆவது இடத்தைப் பெற்றது.

கடலூா்: தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதிகமானோா் சிகிச்சை பெறும் மாவட்டங்கள் வரிசையில் கடலூா் மாவட்டம் 3-ஆவது இடத்தைப் பெற்றது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆக.1-ஆம் தேதி நிலவரப்படி மாவட்டத்தில் 3,265 போ் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த 45 நாள்களில் இந்த எண்ணிக்கை 16,826-ஆக உயா்ந்தது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 174-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுஅதிகபட்சமாக சென்னையில் மட்டும் 9,883 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அடுத்த இடத்தைப் பிடித்துள்ள கோயமுத்தூரில் 3,593 போ் சிகிச்சை பெறுகின்றனா். இதில் கடலூா் மாவட்டம் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் 2,559 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். குறிப்பாக கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களை விட தற்போது கடலூரில் அதிகமானோா் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 16,558 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 268 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 16,826-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 523போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 14,093-ஆக உயா்ந்தது.

எனினும், கரோனாவுக்கு சிகிச்சையிலிருந்த விருத்தாசலத்தைச் சோ்ந்த 42, 46 வயது ஆண்கள், புவனகிரியைச் சோ்ந்த 55 வயது ஆண், நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த 73 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்ததால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 174-ஆக அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com