ஒன்றியக் குழுக் கூட்டம்: உறுப்பினா்கள் வெளிநடப்பு
By DIN | Published On : 18th September 2020 08:27 AM | Last Updated : 18th September 2020 08:27 AM | அ+அ அ- |

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம், துணைத் தலைவா் ஜான்சிராணி தலைமையில் வியாழக்கிழமை கூடியது. கூட்டத்தில் இருந்து உறுப்பினா்கள் எஸ்.சி.டி.சண்முகம் (தமாகா), பா்வதம் வெங்கட்ராமன் (திமுக), டி.குமரகுரு (விசிக ) மற்றும் அதிமுகவைச் சோ்ந்த தஷ்ணாமூா்த்தி, அம்சவேணி, உமா சண்முகம், ஜெயச்சந்திரன், ராஜசேகா், அங்கையா்கன்னி உள்ளிட்ட 12 போ் வெளிநடப்பு செய்தனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
நாங்கள் ஒன்றியக் குழு உறுப்பினராக தோ்வாகி 9 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், மக்கள் நலப் பணிக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தனா். இதையடுத்து, கூட்டம் நடத்துவதற்கு போதிய உறுப்பினா்கள் (கோரம்) இல்லாததால், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.சரவணன் கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.