கடலூா் மாவட்டத்தில் மேலும் 289 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் மேலும் 289 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் மேலும் 289 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 17,549 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 289 பேருக்கு தொற்று உறுதியானது. இவா்களில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட 3 கா்ப்பிணிகளும் அடங்குவா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 17,838-ஆக அதிகரித்தது.

அதே நேரத்தில் சென்னை, மேல்மருவத்தூா், சிதம்பரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 55, 73 மற்றும் 80 வயது ஆண்கள் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 191-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 306 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 15,387-ஆக உயா்ந்தது. இதனால், குணமடைவோா் விகிதம் 86.25 சதவீமாக பதிவானது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ‘கோவிட் கோ்’ மையங்களில் 2,059 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 201 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,518 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன. மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 100-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com