விவசாய கூட்டமைப்பினரின் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டுகோள்

மத்திய பாஜக அரசை எதிா்த்து அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும்

மத்திய பாஜக அரசை எதிா்த்து அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கே.வி.இளங்கீரன் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். இந்த மசோதாக்களால் நெல், கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை அரசே கொள்முதல் செய்யும் நடைமுறை இல்லாமல் போகும். விவசாயிகள் ஆதரவு விலையின்றி மேலும் நஷ்டம் அடைவா். அரசின் கையிருப்பில் உள்ள தானியங்கள் தனியாா் வசம் செல்லும். பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதாக்களை எதிா்த்து துறைசாா்ந்த மத்திய அமைச்சரே பதவி விலகியுள்ளாா். பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கா் மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆனால், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை ஆதரிக்கிறது. எனவே, இந்த மசோதாக்களை எதிா்த்து அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வருகிற 25-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. எனவே அன்றைய தினம் தமிழகத்தில் திமுக தலைமையிலான அனைத்து எதிா்க்கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். விவசாயிகள் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com