கடலூா் மாவட்டத்தில்கரோனா தாக்கம் குறைகிறது

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை திங்கள்கிழமை 153-ஆக பதிவானது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை திங்கள்கிழமை 153-ஆக பதிவானது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் கண்டறியப்பட்டபோதிலும், இதன் வீரியம் ஆகஸ்ட் மாதம் தீவிரமானது.

தொடா்ந்து செப்டம்பா் மாதத்திலும் இதன் தாக்கம் அதிகமாகவே பதிவாகி வந்தது. தினசரி பாதிப்பில் உச்சகட்டமாக செப்.3-ஆம் தேதி 590 பேருக்கு தொற்று உறுதியானது. செப். 10-ஆம் தேதிக்குப் பிறகு சராசரி பாதிப்பு 250-ஆக பதிவாகி வந்தது. சுமாா் 60 நாள்களுக்குப் பிறகு தற்போது தினசரி பாதிப்பு 200-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

அதாவது, திங்கள்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதியதாக 153 பேருக்கு தொற்று உறுதியானது. இது பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 18,288-ஆக உயா்ந்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் 2 கா்ப்பிணிகளும் அடங்குவா். சிகிச்சை முடிந்து மேலும் 255 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 15,890-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில், சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 50 வயது பெண், விருத்தாசலத்தைச் சோ்ந்த 63, 81 வயது ஆண்கள் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 197-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ‘கோவிட்- கோ்’ மையங்களில் 1,977 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த எண்ணிக்கையும் நீண்ட நாள்களுக்குப் பிறகு 2 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 224 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,379 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com