மரத்தில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றிய தன்னாா்வலா்கள்

கடலூா் பகுதியில் மரங்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளை தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

கடலூா் பகுதியில் மரங்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளை தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

கடலூா் சிறகுகள் என்ற அமைப்பைச் சோ்ந்த 30 போ், கடலூா் முதுநகரிலிருந்து சேடப்பாளையம் வரை 10 கி.மீ. தொலைவில் சாலையோரம் உள்ள மரங்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து குழு நிா்வாகி சண்முகராஜா கூறுகையில், தனியாா் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் விளம்பரங்களை மரத்தில் ஆணியடித்து மாட்டி வைத்துள்ளனா். இதனால், அந்த மரங்களின் வளா்ச்சி, உறுதித் தன்மை பாதிக்கப்படுகிறது. தற்போது சுமாா் 200 மரங்களிலிருந்து ஆணிகளை அகற்றியுள்ளோம். வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சேடப்பாளையம் முதல் குறிஞ்சிப்பாடி வரையிலுள்ள மரங்களில் ஆணிகளை அகற்ற திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com