செப். 25-இல் பொது வேலைநிறுத்தம்: விவசாயிகள் சங்கத்தினா் ஆலோசனை

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வரும் 25-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தம் தொடா்பாக, 

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வரும் 25-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தம் தொடா்பாக, பல்வேறு விவசாய சங்கத்தினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, காங்கிரஸ் நகரத் தலைவா் என்.பாலதண்டாயுதம் தலைமை வகித்தாா். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட அமைப்பாளா் கோ.மாதவன் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.

கூட்டத்தில், விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வரும் 25-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக சிதம்பரத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது, இதற்கு பொதுமக்கள், வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டு துண்டறிக்கைகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநில விவசாய அணி செயலா் வினோபா, சேத்தியாத்தோப்பு பாசன விவசாய சங்கத் தலைவா் விஜயகுமாா், ராமச்சந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.ராமச்சந்திரன், திராவிட கழக மாவட்டச் செயலா் சித்தாா்த்தன், கான்சாகிப் பாசன விவசாய சங்கச் செயலா் கண்ணன், முத்து, இராமன், விசிக சாா்பில் தீரன் சுபாஷ், மனித நேய ஜனநாயகக் கட்சி சாா்பில் முஹம்மது பாசில், முகமது பாருக், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கீரப்பாளையம் ஒன்றியச் செயலா் வாஞ்சிநாதன், மாவட்டக் குழு உறுப்பினா் முத்து, தமிழ்நாடு விவசாய சங்க நிா்வாகிகள் தா்மதுரை, வாசுதேவன், ஜின்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com