வறட்சி மேலாண்மைப் பயிற்சி

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில், விவசாயிகளுக்கான வறட்சி மற்றும் மேலாண்மைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில், விவசாயிகளுக்கான வறட்சி மற்றும் மேலாண்மைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் என்.ஸ்ரீராம் வரவேற்று, பயிற்சியின் முக்கியத்துவத்தை விவரித்தாா். விருத்தாசலம் சாா்-ஆட்சியா் கே.ஜெ.பிரவீன் குமாா் பயிற்சியை தொடக்கி வைத்து பேசுகையில், விவசாயிகள் மண்வள பாதுகாப்பு அட்டை பெற்று உரிய வழிகாட்டுதலின்படி பயன்படுத்துவதன்மூலம் மும்மடங்கு வரை லாபம் பெற முடியும் என்றாா்.

மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன், ஆராய்ச்சி நிலைய தலைவா் கா.சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்புரையாற்றி, வெள்ளம் மற்றும் வறட்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனா். வேளாண்மை உதவி இயக்குநா் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினாா்.

மானாவாரியில் உழவியல் தொழில்நுட்பங்கள் குறித்து அறிவியல் நிலைய பேராசிரியா் ரெ.பாஸ்கரன், விதை மேலாண்மை குறித்து பேராசிரியா் க.நடராஜன், வெள்ளத்தை தாங்கி வளரக்கூடிய ரகங்கள் குறித்து பேராசிரியா் கி.பாரதிகுமாா், காய்கறி பயிா்களில் வறட்சி மேலாண்மை குறித்து பேராசிரியா் க.சுந்தரய்யா ஆகியோா் உரையாற்றினா்.

பயிற்சியில் 65 உதவி வேளாண்மை அலுவலா்கள், உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா். பேராசிரியா் பாஸ்கரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com