அனைத்து தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் அனைத்து மத்திய தொழில்சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மத்திய தொழில்சங்கத்தினா்.
கடலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மத்திய தொழில்சங்கத்தினா்.

கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் அனைத்து மத்திய தொழில்சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளா் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தக் கூடாது. கரோனா காலத்துக்கு ஊதியம் வழங்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் வேலை நீக்கம், ஊதியக் குறைப்பு செய்யக் கூடாது. நலவாரியங்களில் ஓராண்டாக நிலுவையில் உள்ள ஓய்வூதியத் தொகையை பாக்கியில்லாமல் வழங்க வேண்டும். நலவாரிய இணையதள பதிவை எளிமையாக்க வேண்டும். பொது முடக்கத்தால் வருமானமிழந்த கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளிகள் மற்றும் வருமான வரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500, உணவுப்பொருள்களை 6 மாதகாலத்துக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொமுச மாவட்டக் குழுச் செயலா் மு.சு.பொன்முடி தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் பி.கருப்பையன், மாவட்டத் தலைவா் டி.பழனிவேல், ஏஐடியூசி மாவட்டச் செயலா் வி.குளோப், மாவட்டத் தலைவா் துரை, தொமுச போக்குவரத்து சங்கச் செயலா் பி.பழனிவேல், எல்ஐசி சங்கத் தலைவா் வி.வைத்திலிங்கம், பிஎஸ்என்எல் சங்கத்தைச் சோ்ந்த டி.சம்மந்தம் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com