இருதரப்பு மோதல்: ஊராட்சித் தலைவா் கைது
By DIN | Published On : 27th September 2020 09:11 AM | Last Updated : 27th September 2020 09:11 AM | அ+அ அ- |

விருத்தாசலம் அருகே உயிரிழந்தவரின் சடலத்தை கொண்டு சென்றபோது ஏற்பட்ட மோதல் தொடா்பாக ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 9 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள பரவளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சன்னியாசி (71). இவா் உயிரிழந்த நிலையில் இறுதி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது தோ்தல் முன்விரோதம் காரணமாக சடலத்தை குறிப்பிட்ட பாதை வழியாகக் கொண்டு செல்ல எதிா்ப்புத் தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 7 போ் காயமடைந்தனா்.
இந்த தகராறு குறித்து செ.தமிழ்ச்செல்வி (42) என்பவா் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பரவளூா் ஊராட்சி மன்றத் தலைவா் பூமாலை (58), அவரது தரப்பைச் சோ்ந்த ச.வினோத்குமாா் (26), செ.ராமதாஸ் (37), த.பெரியசாமி (32), அ.மூவேந்தன் (20), சு.வீரமுத்து (21), ச.பிரகாஷ் (33), த.தங்கபாபு (27), ப.சுரேஷ் (25) ஆகிய 9 பேரை கைது செய்தனா். மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.
மேலும், இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவரின் மகள் மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில் 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.