கடலூரில் மிதமான மழை
By DIN | Published On : 27th September 2020 09:11 AM | Last Updated : 27th September 2020 09:11 AM | அ+அ அ- |

தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் நிலவி வருவதால் கடலூரில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சனிக்கிழமை மாலை மிதமான அளவில் மழை பெய்தது.
முன்னதாக காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் வானமாதேவியில் 22 மி.மீ, குடிதாங்கியில் 7.50 மி.மீ, பண்ருட்டியில் 2 மில்லி மீட்டா் மழை பதிவானது.