கரோனா: கடலூா் மாவட்டத்தில் 90% போ் குணம்
By DIN | Published On : 27th September 2020 09:12 AM | Last Updated : 27th September 2020 09:12 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 90.86 சதவீதம் போ் குணமடைந்தனா்.
கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 19,215 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 212 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 19,427-ஆக அதிகரித்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் மங்களூா் காவல் நிலைய காவலா் ஒருவரும் அடங்குவாா்.
அதே நேரத்தில், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலி என்எல்சி பகுதியைச் சோ்ந்த 56 வயது ஆண் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 208-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 276 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 17,653-ஆக உயா்ந்தது. இது 90.86 சதவீதமாகும்.
மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ‘கோவிட்-கோ்’ மையங்களில் 1,436 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 130 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,450 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.