விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே விளை நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பணியை ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்.
விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே விளை நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பணியை ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

திட்டக்குடி அருகேயுள்ள பெரங்கியம் கிராமத்தில் விளை நிலங்களின் வழியாக இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோலிய பொருள்களை கொண்டு செல்வதற்காக கடந்த 2004-ஆம் ஆண்டு குழாய் அமைத்தது. இதற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்தியன் ஆயில் நிறுவனத்தினா் பெரங்கியம் கிராமத்துக்கு பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனா். அங்கு வயல்களில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனை அங்கிருந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தினா். மேலும், மற்ற விவசாயிகளுக்கும் தகவல் அளித்தனா். ஆனால், அதற்குள் 18 மீட்டா் அகலத்துக்கு சுமாா் ஒரு கி.மீ தூரம் வரை இருந்த பயிா்கள் அழிக்கப்பட்டன.

அரங்கூா், பெரங்கியம் பகுதி விவசாயிகள் இந்தப் பணிகளை தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் அமைக்கும் பணி நடைபெறுவதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தினா் தெரிவித்தனா்.

தங்களுக்கு இதுகுறித்து எந்த அறிவிப்பும் தராமல் பயிா்களை எப்படி நாசம் செய்யலாம் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினா். இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த ராமநத்தம் கிராம நிா்வாக அலுவலா் வினோத்குட்டி பணிகளை நிறுத்த உத்தரவிட்டாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அரங்கூரில் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால் விவசாயிகள் கலைந்து சென்றனா். சேதப்படுத்திய பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை எனில் போராட்டம் நடத்தப்படுமென விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com