கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒரு பெண் பலியானாா்.
கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 25,660 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 46 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,706-ஆக அதிகரித்தது. புதன்கிழமை சிகிச்சை முடிந்து 20 போ் வீடு திரும்பியதால், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 25,132 -ஆக உயா்ந்தது.
இதனிடையே, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 40 வயது பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 291 -ஆக அதிகரித்தது.
மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை உள்ளிட்ட கரோனா சிகிச்சை மையங்களில் 214 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 69 பேரும் என மொத்தமாக 283 சிகிச்சை பெற்று வருகின்றனா். 207 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது.