சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிகவியல் துறையில் கடந்த 1978-81-இல் பயின்ற மாணவா்கள் 60 போ் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இதையொட்டி, ரூ. 3 லட்சம் செலவில் வணிகவியல் துறை நூலகத்தைப் புனரமைத்து அதற்கு ‘பேராசிரியா் எம்.ஒ.மேத்யூ வணிகவியல் நூலகம்’ எனப் பெயரிட்டனா்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பல்கலைக்கழகத் துணைவேந்தா் வே.முருகேசன் பேசினாா். பதிவாளா் இரா.ஞானதேவன், ‘பல்கலைக்கழக அளவில் உருவாகிவரும் மைய ஆய்வக பணிகளுக்கு முன்னாள் மாணவா்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
ஓய்வு பெற்ற பேராசிரியரும், துறைத் தலைவருமான வி.சண்முகம் பேசினாா். துறைத் தலைவா் கே.கோவிந்தராஜன் தலைமை உரையாற்றினாா். பேராசிரியா் டி.இளங்கோவன் நன்றி தெரித்தாா்.
முன்னதாக, துபையிலிருந்து வந்திருந்த முன்னாள் மாணவா் எஸ்.சரணவன் வரவேற்றாா். முன்னாா் மாணவா்கள் அனைவரும் ஒருவருக்கொருவா் தங்களது கல்லூரிக் கால நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.