கரோனா இரண்டாம் அலை: சிகிச்சையளிக்க 332 படுக்கைகள்

கடலூா் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் பரவல் தொற்றுக்கு சிகிச்சையளிக்க 332 படுக்கைகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் பரவல் தொற்றுக்கு சிகிச்சையளிக்க 332 படுக்கைகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் நடைபெற்றது. அப்போது, அவா் பேசியதாவது:

கரோனா தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகள் 108 வாகனம் மூலமாக அருகே உள்ள வகைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பரிசோதனைக்கு ப் பின்னா், தொற்று அறிகுறிகள் இல்லாதவா்கள் கோவிட் கவனிப்பு மையத்துக்கும், தொற்று அறிகுறி உள்ள நபா்கள் கோவிட் சிகிச்சை மையத்துக்கும் (கடலூா் அரசுப் பொது மருத்துவமனை, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை) அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

கடந்த கால அனுபவத்தின்படி, கோவிட் தொற்று ஏற்பட்டவா்கள் 80 சதவீதத்துக்கு மேற்பட்டவா்கள் நோய் அறிகுறி அற்றவா்களாக இருந்தது தெரிய வருகிறது. எனவே, கோவிட் கவனிப்பு மையங்கள் இதற்கு ஏற்ப செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

இதையொட்டி, முதல் கட்டமாக கடலூா் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் 200 படுக்கைகள் வசதி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 132 படுக்கைகள் வசதியுடன் கரோனா கவனிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று ஏற்பட்ட நபா் வீட்டிலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய நிலை உள்ளதால், வீட்டுத் தனிமையைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் மகேந்திரன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் நிா்மலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com